fbpx
REஉலகம்

கொரோனாவை தொடர்ந்து ; ரோபோ உருவத்தில் வர இருக்கும் அடுத்த ஆபத்து – வல்லுநர்கள்

உலகமே இன்று பேராபத்தான ஒரு கொடிய உயிர்கொல்லி வைரசால் பெரும் அவதி பட்டுவருகிறது. பல நாடுகளிலும் அதிக அளவிலான உயிர்களை பறித்துள்ள இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் , அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக அனைத்து நாடுகளும் போராடிக்கொண்டிருக்கின்றன.

இதையெல்லாம் சமாளித்து விடலாம் எதிர்காலத்தில் ரோபோ வடிவில் வரஇருக்கும் அடுத்த பேராபத்தைத்தான் நம்மால் சமாளிக்க முடியாது என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

பல நிறுவனங்களில் பணி இடங்களில் மனித ஆற்றலை ரோபோக்கள் பதிலீடு செய்வதை தற்போது கொரோனா வேகப்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ரோபோக்கள் உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து பல புத்தகம் எழுதி இருக்கும் மார்ட்டின் போர்ட் , உரையாட சக மனிதன் தேவை என்ற நிலையை கொரோனா மாற்றியிருக்கிறது என குறிப்பிடுகிறார்.

அதுமட்டும் அல்லாமல் கொரோனா காரணமாக இப்போதே பல நிறுவனங்கள் ரோபோக்களை பணியமர்த்த தொடங்கிவிட்டன.வால்மார்ட் தரைகளை சுத்தம் செய்யவும், தென் கொரியா கைகளை சுத்திகரிக்க சேணிடைசர் வழங்கவும் ரோபோக்களை பயன்படுத்துகின்றன.

உலகில் உருவாகி பரவியுள்ள இந்த கொரோனா வைரஸின் காரணமாக 2021-ம் ஆண்டு வரை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரைக்கும் இந்த சமயத்தில் பல இடங்களில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் மனிதர்களுக்கு பெரும் சவாலாகவும், பேராபத்தாகவும் அமையும் என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close