fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

உலக நாடுகளில் 96 லட்சம் பேருக்கு கொரோனா….! 1180 பேர் ஒரேநாளில் பிரேசிலில் பலி!

Worldwide corona status reaches 96 lakh

ஜெனீவா:

உலகளவில் 96.99 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.

நாள்தோறும் சராசரியாக 2 லட்சம் பேர் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகில் கொரோனாவில் இருந்து 52,51,111 குணம் அடைந்தனர்.

கொரோனா பாதிப்புடன் 39,57,531 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகம் முழுவதும் இதுவரை 4,90,933 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் அதிர்ச்சிக்குரிய ஒரு தகவல்.

24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் கொரோனாவால் 5,124 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக பிரேசிலில் மிக அதிகபட்சமாக 1,180 பேர் பலியாகியுள்ளனர். மெக்ஸிகோவில் 947 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் 401 பேர் பலியாகி இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பிரேசிலில் 40,673 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 24 மணி நேரத்தில் 37,907 பேருக்கும், இந்தியாவில் 18,185 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close