5.40 லட்சம் பேர்…! கொரோனாவால் உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை!
Worldwide 5.40 people dead due to corona

ஜெனீவா:
உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.40 லட்சமாக உயர்ந்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆகையால், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது ஆகியவற்றின் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.
அடர்த்தியான மக்கள் தொகை, போதிய ஒத்துழைப்பு இன்மை ஆகிய காரணங்களால் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா உச்சத்தில் உள்ளது. இந் நிலையில், உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,17,32,169 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,40,119 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இருந்து 6,623,954 குணம் பெற்றுள்ளனர்.
















