fbpx
GeneralRETamil Newsஉலகம்

எய்ட்ஸ் மாதிரி, கொரோனாவும் அழியாது!உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!!

WHO declared about corona life

ஜெனிவா:

கொரோனா நம்மை விட்டு போகாது. உலக மக்கள் அனைவரும் அதனுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் மைக்கேல் ரேயன் கூறியதாவது: முதல்முறையாக புதிய வைரஸ் மனிதர்களுக்குள் நுழைந்துள்ளது. இந்த பிரச்னை எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாது.

இது நம்மை விட்டு எங்கும் போகாது. எச்ஐவி வைரஸ் எங்கும் செல்லவில்லை. இங்குதான் உள்ளது. அது போல் கொரோனா வைரஸ் நம்மை விட்டு எங்கும் போகாது.

உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவது ஆபத்தானது. கொரோனா தடுப்பு பணியில் உள்ள சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்கு உரியது.

கொரோனா நமக்கு பல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டு வந்துள்ளது. மோசமானதையும் கொண்டு வந்துள்ளது என்று கூறினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close