கொரோனா தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும்..! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
WHO corona warning

ஜெனீவா:
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: ஐரோப்பிய, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனாலும் பல நாடுகள் தவறான திசையில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன.
அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்றாமல் போனால் கொரோனா அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்போது இருக்கும் நிலைமையைவிட படுமோசமாக உச்சகட்ட மோசமான அழிவை ஏற்படுத்தும்.
பரவுதல் மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதை மையமாகக் கொண்ட ஒரு விரிவான திட்டத்தை வகுக்க வேண்டும். மக்கள் சமூக இடைவெளி , கை கழுவுதல், முகக்கவசம் அணிவது, இருமல் மற்றும் தனிமைபடுத்துதல் போன்ற அடிப்படை பொது சுகாதாரக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்றால் இந்த நோய் நம்மை மோசமான் நிலைக்கை இழுத்து செல்லும் என தெரிவித்துள்ளார்.
















