fbpx
விளையாட்டு

கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுகிறார் டிவில்லியர்ஸ் : ரசிகர்கள் சோகம்!!

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணியின் 34 வயதாகும் ஏபி டிவில்லியர்ஸ் கடந்த 2004ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

பந்தை மைதானத்தின் எல்லா பக்கமும் சுழன்று அடிக்கக்கூடிய அதிரடி வீரர் என்பதால் ரசிகர்கள் இவரை மிஸ்டர் 360 என்ற செல்லமாக அழைப்பார்கள்.

இவர் தென்னாப்பிரிக்கா அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இவரது தலைமையில் அந்த அணி 103 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 59 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், விக்கெட் கீப்பராகவும் சில போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 உலக கோப்பையை வெல்வதே தனது லட்சியமாக வைத்திருந்த டிவில்லியர்ஸ். ஆனால் திடீரென நேற்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வீடியோ மூலம் அறிவித்தார். அதில் நான் மிகவும் சோர்ந்து போய் விட்டேன்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதற்கு இது தான் சரியான தருணம் என அவர்  கூறியிருந்தார்.

இவரது ஓய்வினால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் முழ்கியுள்ளனர். இதுவரை டிவில்லியர்ஸ் 228 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 25 சதங்கள் உள்பட 9,577 ரன்களும், 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22 சதங்கள் உள்பட 8,765 ரன்களும், 78 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 10 அரைசதங்களுடன் 1,672 ரன்களும் குவித்துள்ளார்.

மேலும், ஒரு நாள் போட்டியில் 16 பந்துகளில் அதிவேக அரை சதம் , 31 பந்துகளில் அதிவேக சதம், 64 பந்துகளில் அதிவேகத்தில் 150 ரன்கள் கடந்து சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close