fbpx
RETamil NewsTrending Nowஉலகம்

நல்லா கேட்டுக்குங்க..! கொரோனா பத்தி குட் நியூஸ்…!

Trump twitter message about corona status

வாஷிங்டன்:

அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைய தொடங்கி இருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் இப்போது அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம். அந்நாட்டில் கொரோனா வைரசால்  நோயாளிகளின்  எண்ணிக்கை 15 லட்சத்தை தொட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு  820 பேர் பலியாகியுள்ளனர்.  இந் நிலையில், அமெரிக்காவில்  கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறி உள்ளதாவது:

விதி விலக்குகளை தவிர நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது.  இது நல்ல விஷயம் என்றார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close