அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட உணவு லிஸ்ட் ,லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா,கூடவே மில்க் ஷேக்!!!.
சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகள், அதனுடன் பழச்சாறுடன் கூடிய மில்க் ஷேக் கொடுக்கப்பட்டதாக ஜெயலலிதா கைப்பட எழுதி கேட்டுள்ள லிஸ்ட் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகள், அதனுடன் பழச்சாறுடன் கூடிய மில்க் ஷேக் கொடுக்கப்பட்டதாக டாக்டர் வெங்கடேஷ் சமர்பித்துள்ள ஜெயலலிதா தான் கைப்பட எழுதிய 98 பக்க டைரியின் கடைசி பக்கத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் கூறிவந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது தமிழக அரசு.
இந்த விசாரணை ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவர்கள், சசிகலா குடும்பத்தினர், ஜெயலலிதாவின் உதவியாளர்கள் என ஆஜராகும் ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றது.
அந்த வகையில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆகினர். அப்போது டாக்டர் சிவக்குமார் 98 பக்கம் கொண்ட ஜெயலலிதா எழுதிய டைரியும், மூச்சுதினரளுடன் ஜெயலலிதா கடைசியாக பேசிய ஆடியோவும் சமர்பித்தார்.
அந்த பட்டியலில் அவருக்கு தேவையான உணவு வகைகளும், அவரது எடை உள்ளிட்ட சில குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றை ஜெயலலிதாவே கைப்பட எழுதியதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தலிஸ்டில், காலை 5:30 மணிக்கு 400ml, 8;40 க்கு 120 mlமற்றும் மாலை 5:45 க்கு 200ml என மூன்றுமுறையும், இரவு 6:30 to 7 மணிக்குள் இரவு உணவின்போது 2௦௦ ml பால் என எடுத்துக்கொண்டுள்ளார்.
2016 நவம்பர் 22 ஆம் தேதி மதியம் லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா ஆகிய இனிப்பு பலகாரங்களை உட்கொண்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து 2016 டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் அதாவது இறந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஆப்பிள், ஸ்ட்ராபெரி, வாழைப்பழம் மில்க் ஷேக் வகைகளை எடுத்துக்கொண்டது அறிக்கையில் தகவல் கூறப்பட்டு உள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதே, சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் மூன்று இனிப்புகள் கொடுக்கப்பட்டதும் பிறகு அதோடு மில்க்ஷேக்களும் கொடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்ல அப்போலோ ஹாஸ்பிடலில் என்னதான் நடக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.