வருகிறது ரூ.1000ல் கொரோனா தடுப்பூசி…! நவம்பரில் இந்தியாவில் கிடைக்க வாய்ப்பு!
Rs.1000 for corona injection in india

லண்டன்:
நவம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி 1,000 ரூபாய் விலையில் இந்தியாவில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
உலக மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. நோய் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் ஆய்வு மேற்கொண்டன.
இந் நிலையில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி டோஸ் வினியோகிக்க சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் என்றும், இதன் விலை ரூ.1000 எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி பாதுகாப்பானது என மருத்துவ நிபுணர்கள் சான்றிதழ் அளித்தவுடன் இந்தியாவில் உற்பத்தி தொடங்கப்படும் எனவும் சீரம் இன்ஸ்டிடியூட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















