தமிழகத்தின் கடையநல்லூரில் ரம்ஜான் பண்டிகை. தொழுகையில் 10,000க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்பு!!!
கடையநல்லூர்: கடையநல்லூரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த தொழுகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.
கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 6 இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். ரமலான் பிறை 30 நாட்கள் முடிந்ததை அடுத்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 6 இடங்களில் பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டன.
இதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடலில் நடந்தது. இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் மாநில மேலாண்மை குழு தலைவர் அப்துன் நாஸிர் பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார்.
அதை தொடர்ந்து அவர் மக்களுக்கு ஆற்றிய பெருநாள் உரையில் மீண்டும் நோன்பு மாதத்தில் தற்போது இந்திய திருநாட்டில் மத வாத அரசு மாட்டின் பெயரால் அரசியல் செய்து வடமாநிலங்களில் தொடந்து இஸ்லாமியர்களும் தலித்துகளும் அடித்து கொல்லப்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் குட்டா என்ற மாவட்டத்தில் எருமை மாடுகளை விலைக்கு வாங்கி வியாபாரத்திற்க்காக சிராபுதின் அன்சாரி மற்றும் முர்தாஸ் அன்சாரி ஆகிய இரண்டு முஸ்லிம்கள் பன்னட்டி கிராமம் அருகே வாகனத்தில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது இடைமறித்த பாசிச வெறியர்கள், சிராபுதின் அன்சாரி மற்றும் முர்தாஸ் அன்சாரி ஆகிய இருவரையும் கடுமையாகத் தாக்கி, அவர்களைக் கயிற்றில் கட்டி சாலையில் இழுத்துச் சென்று, துடிதுடிக்க அடித்துக் கொலை செய்துள்ளனர். இந்த காட்டுமிராண்டிதனத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
இக்கொலைச் செயலில் ஈடுப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதோடு நின்றுவிடாமல், பிணையில் வெளிவர விடாமல், மக்கள் மன்றத்தின் முன், விரைந்து கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், குறிப்பாக முஸ்லிம்கள் மீதான படுகொலைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்கள், இந்திய நாட்டில் வாழ்வதற்கே பாதுகாப்பற்ற ஓர் அச்ச நிலை இருந்து வருவதை இந்த சம்பவம் மேலும் உறுதிப்படுத்துகிறது. பிரதமரான மோடி, மாட்டின் பெயரால் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்ததாகச்(?) சொன்ன பின்பும் இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களை மாட்டுக் குண்டர்களால் தொடர்ச்சியாகச் செய்ய முடிகிறது என்றால் பிரதமரின் கண்டிப்பு வெறும் கண்துடைப்பு என்பது உறுதியாகிறது.
கடந்த காலங்களில் மாட்டுக் குண்டர்களால் நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனங்களை இந்த மதவாத பாஜக அரசு, உரிய முறையில் கையாண்டு அவர்களைக் கடுமையாகத் தண்டித்திருந்தால் இதுபோன்ற சம்பவங்களை முற்றிலும் தடுத்திருக்கலாம்.
எனவே, மதத்தின் பெயரால், மிருகவெறி கொண்டவர்களால் நடத்தப்படும் இந்தப் பயங்கரவாதத்தை முற்றிலும் தடுக்க வேண்டுமானால் இந்த மாட்டுக் குண்டர்களைப் பொது வெளியில் சுட்டுத் தள்ள வேண்டும். அல்லது பொது வெளியில் தூக்கிலிடப்பட வேண்டும்.
இதுபோன்ற கடும் தண்டனைக் கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற பயங்கரவாதத்தை முற்றிலும் தடுக்க முடியும். மேலும் கொல்லப்பட்டவர்களின் தரப்பின் மனநிலையிலிருந்து பார்த்தாலும் இதுவே உரிய நீதியாகும்.
தேசபக்தியை பற்றி வாய்க்கிழிய பேசும் மோடி, மனிதர்களை அடித்துக் கொல்லும் இந்தக் தொடர் காட்டுமிராண்டித்தனத்தைத் தடுக்கத் தவறியதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெரும் தலை குனிவை ஏற்படுத்திவிட்டார்.
மாட்டுக் குண்டர்களின் இந்தத் தாக்குதலிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள, தற்காப்பு ஆயுதம் வைத்திருந்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையை பாஜக அரசு ஏற்படுத்திவிடக்கூடாது.
ரமலான் மாத நோன்பு என்றும் பாராமல் முஸ்லிம்களைத் தாக்கி ஒருவித அச்சத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற பாசிசக் கோழைகளின் எண்ணம் என்றும் எடுபடப் போவதில்லை. சட்டமும் அரசும் தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் முஸ்லிம்கள் அமைதி காத்து வருகிறார்கள் என்பதை மதவாத சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மண்ணின் விடுதலைக்காக உயிர்நீத்த முஸ்லிம்கள், தங்களைத் தற்காத்துக் கொள்ள எத்தகைய தியாகத்திற்கும் தயார் என்பதை, மாட்டின் பெயரால் பயங்கரவாதத்தை நடத்தும் மதத் தீவிரவாதிகளும் அதிகார வர்க்கமும் உணர்ந்து செயல்பட வேண்டும் என எச்சரிக்கிறோம்.
மாட்டுக் குண்டர்களைத் தடுக்கத் திராணியற்ற இந்த மோடி அரசால் முஸ்லிம்களின் இந்த நம்பிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, சட்டத்தின் முன் அனைத்து மதத்தவரும் சமம் என்ற மதசார்பற்றத் தன்மையை நிலைநாட்ட, குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விரைந்து நிறைவேற்றி, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், கொல்லப்பட்ட குடும்பத்தாருக்கு அரசு வேலையும் உரிய பொருளாதார இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் தனது பிரசங்கத்தில் கூறினார்..
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அப்துல் ஜப்பார், குறிச்சி சுலைமான், துராப்ஷா, அஜீஸ், அய்யூப்கான், மைதீன் அப்துல்காதர் ஆகியோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை டவுன் கிளை சார்பில் தொண்டரணினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
இது போன்று பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் அப்துல் குத்தூஸ் ரஹ்மானியாபுரம் 3வது தெரு மர்யம் பள்ளி திடலில் உஸ்மான் ,மக்காநகர் 8வது தெரு தவ்ஹீத் திடலில் முகம்மது தாஹா, தவ்ஹீத் நகர் அல் ஹிதாயா திடலில் தாரிக், இக்பால் நகர் தெப்பதிடலில் ஹாமித் ஆகிய 6 இடங்களில்நடை பெற்ற பெருநாள் தொழுகையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் தங்கராஜ் மேற்பார்வையில் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர் கோவிந்தன் , உதவி ஆய்வாளர் பரிமள ஆகியோர் சிறப்பாக செய்து கொடுத்தனர்..
தொழுகைக்கு முன்பாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.