fbpx
REஇந்தியா

மேற்குவங்கம்-வங்கதேசம் இடையே கரையை கடந்தது ‘ஆம்பன்’ புயல்!!

சென்னை :

சூப்பர் புயல், ‘ஆம்பன்’ இன்று இரவு மேற்குவங்கம்-வங்கதேசம் இடையே கரையை கடந்தது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, அந்த மையம் கூறியிருப்பதாவது;

சூப்பர் புயல் ஆம்பன், சற்று வலு குறைந்து, மிக தீவிர புயலாக, வங்கக் கடலில் மாறியது.

இது, நேற்று இரவில், கோல்கட்டாவுக்கு தென் கிழக்கே, 400 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டது.

இன்று புயல் கரையை கடந்தது .அப்போது  மணிக்கு 190 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

இதனால் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தின் பல பகுதிகள் சேதமடைந்ததாகவும், தகவல்கள்  வெளியாகியுள்ளன.முழுமையான தகவல்கள் நாளை தெரியவரும்.

ஆம்பன் புயல் காரணமாக, வங்கக் கடலில் அலைகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

அந்தமான் நிகோபார் முதல், வங்கதேசம் வரையில், வங்கக் கடலுக்குள் மீனவர்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் உள்ளிட்டவை செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.ஆகவே யாரும் கடலுக்கு செல்லவில்லை.

புயல் கரையை கடந்ததும், கடல் தட்ப வெப்பநிலை மற்றும் நிலப் பகுதிகளில் நிலவும் அசாதாரண வானிலை, நாளை முதல் படிப்படியாக சீராகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related Articles

Back to top button
Close
Close