RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது!
சென்னை: நாமக்கல்லில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு நடத்தியதை எதிர்த்து போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் இன்று காலை திடீரென ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன், சேகர்பாபு, ரங்கநாதன், ஆ.ராசா, மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
அப்போது மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் சட்டத்தின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாக செயல்படுவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல. கருத்து சுதந்திரத்தையும், அறவழிப் போராட்டங்களையும் ஒடுக்க உத்தரவிடுவது ஆளுநருக்கு எந்த விதத்திலும் மதிப்பளிக்காது என்று கூறினார்.