பிரிக்கமுடியாத கொரோனாவும், மகாராஷ்டிராவும்..! 1 லட்சத்தை எட்டும் பாதிப்பு…!
Maharashtra leads 1 lakh corona cases

டெல்லி:
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 94,041 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் 200 நாடுகளில் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது கொரோனா. இந்த வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,86,579 ஆக அதிகரித்துள்ளது. 24 மணிநேரத்தில் மட்டும் 9996 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் இதுவரை 8102 பேர் உயிரிழந்த நிலையில் 141029 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 94,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.
இதுவரை 3438 பேர் உயிரிழக்க 44,517 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 36,841 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதுவரை 326 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 19,333 பேர் குணமடைந்துள்ளனர்.
டெல்லி 3வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 32,810 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 984 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 12,245 பேர் குணமடைந்துள்ளனர்.















