fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் காலமானார்!

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மாலை 6.10 மணி அளவில் காலமானார் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிறநீரக தொற்று காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தது.

இதனையடுத்து கடந்த ஆறாவது மற்றும் ஏழாவது அறிக்கையில் கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

இதனையடுத்து மாலை 6.40 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி அவர்கள் 6.10 மணிக்கு அளவில் காவேரி மருத்துவமனையில் உயிரிழந்ததாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close