டில்லி:
”காங்கிரஸ் தலைவர்கள் ஜாமீன் வண்டியாக உள்ளனர்.என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் அதற்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 8 குற்றவாளிகளுக்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதை தவறாக மோடி புரிந்து கொண்டுள்ளார். அடித்து கொல்பவர்களுக்கு பூஜை செய்யும் அரசு இது என்று மக்கள் அழைக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஜார்கண்ட் மாநிலம் ராம்காரில் இஸ்லாமிய இறைச்சி வியாபாரி பசு பாதுகாவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவர்கள் மேல் முறையீடு செய்தனர்.
இதையடுத்து தண்டனை நிறுத்திவைக்கப்பட்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீனில் வெளியே வந்த 8 பேருக்கும் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மாலை அணிவத்து மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்த புகைப்படம் கடும் விமர்சனத்திற்குள்ளானது.
இவர்களை பாதுகாக்கும் வகையில் ஜெயந்த் சின்கா கருத்து தெரிவித்திருந்தார். இந்திய நீதித்துறை மீது தனக்கும் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த செயலை காங்கிரஸ் வன்மையாக கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.