RETamil Newsதமிழ்நாடு
தன்னை போலி பகுத்தறிவுவாதி என்ற தமிழிசைக்கு கமல் ஹாசன் பதில்
மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய தமிழிசை, அமித்ஷா வருகையால் தமிழக பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். டிடிவி தினகரன் போன்றவர்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறுவதில் கவலை இல்லை என்றும் நாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும் பேசிய தமிழிசை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் ஒரு போலி பகுத்தறிவுவாதி. கட்சிக் கொடியையும், பெயரையும் அம்மாவாசை அன்று அறிவித்தது எங்களுக்கு தெரியாதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதை தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன், தன்னை ஒரு போலி பகுத்தறிவுவாதி என்று கூற, தமிழிசைக்கு என்ன உரிமை இருக்கிறது என்று தெரியவில்லை.
நான் அரசியலுக்கு வந்திருப்பது பகுத்தறிவு கருத்துகளைப் பரப்புவதற்கு மட்டுமல்ல. ஏழ்மையையும், லஞ்ச, ஊழலை ஒழிப்பதற்கும் தான் என்று கூறினார்.