சுவையான செட்டிநாடு பெப்பர் சிக்கன்!
தேவையான பொருட்கள்:
1. எண்ணெய் 2 தேக்கரண்டி
2. கடுகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை,
3. காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் – 3
4. வெங்காயம்-2
5. தக்காளி -1
6. உப்பு
7. இஞ்சி பூண்டு பேஸ்ட்
8. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
9. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
10. தனியா 2 தேக்கரண்டி
11. மிளகு 1 1/2 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் வாணலியில் 2 தேக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றவும்.
பிறகு அதில் கடுகு போட்டு பின்னர் அது பொரிந்ததும் இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, போடவும்.
பின்னர் காய்ந்த மிளகாய் போடவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதன் பின் தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும். 3 பச்சை மிளகாய் சேர்க்கவும். அதன் பின், மஞ்சள் தூள், மிளகாய் மற்றும் தனியா தூள் சேர்த்து கிளறவும்.பின்னர் தக்காளி சேர்த்து மிதமான சூட்டில் கிளறி கொண்டே இருக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடவும். 15 நிமிடம் ஆனதும் சிக்கன் நன்றாக வெந்திருக்கும். பின் நன்கு இடித்த மிளகு ஒன்றரை தேக்கரண்டி சேர்த்து கிளறவும் .
சுவையான காரசாரமான செட்டிநாடு பெப்பர் சிக்கன் பரிமாற தயார்.