fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

கொரோனாவால் மூடப்படுகிறது டெல்லி…! அறிவித்த அர்விந்த் கெஜ்ரிவால்!

Delhi To Seal Borders For A Week

டெல்லி:

கொரோனாவால் டெல்லியில் எல்லைகள் அடுத்த ஒருவாரத்துக்கு சீல் வைக்கப்படும் என்று முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.

கொரோனா தொற்றில் தலைநகர் டெல்லி 3வது இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரிக்க டெல்லி காரணமாக இருக்கிறது.

இந் நிலையில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு காணொலி மூலம் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

டெல்லியில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி எல்லைகள் அடுத்த ஒருவாரத்துக்கு மூடப்படும்.

அத்யாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடிமக்களிடம் கருத்து கேட்டு அதன் பின்னர் இந்த சாலையை திறப்போம். இது குறித்து டெல்லி மக்கள் 88000 07722 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் கருத்து தெரிவிக்கலாம்.

delhicm.suggestions@gmail.com என்ற மின் அஞ்சலிலும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் அல்லது வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் 1031 என்ற எண்ணுக்கு அழைத்து கருத்தைப் பதிவு செய்யலாம் என்றார்.

டெல்லியில் இதுவரை 20,000 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. 473 பேர் பலியாகி உள்ளனர். 24 மணி நேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close