RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

மோடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் எடப்பாடி! ஊரடங்கு நீடிப்பு குறித்து கமல்ஹாசன் ட்வீட்!!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் 1075 பேர் பாதிப்படைந்துள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த தன்னிச்சை முடிவாக தாங்களாகவே ஊரடங்கை நீட்டித்துள்ளனர். ஆனாலும் தமிழகத்தை பொறுத்தவரையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், அண்டை மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கும்போது என் முதல்வர் யாருடைய கட்டளைக்காகவோ காத்திருக்கின்றார். என்னுடைய குரல் மக்கள் சார்பான குரல். உடனே உங்கள் பதவி அதிகாரத்தை பயன்படுத்தி ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடுங்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close