fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

ஜெ. அன்பழகன் உடல் நல்லடக்கம்….! திமுகவினர் கண்ணீர் அஞ்சலி!

DMK mla anbazhagan funeral

சென்னை:

இன்று காலை உயிரிழந்த திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62.

அன்பழகனுக்கு இன்றுதான் பிறந்த நாள் என்பதும், பிறந்த நாளிலேயே அவர் மரணம் அடைந்திருப்பதும் பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கொரோனாவால் அவர் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள வீட்டிற்கு ஜெ.அன்பழகன் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மகாலட்சுமி தெருவில் உள்ள வீட்டில் ஜெ.அன்பழகன் உடலுக்கு உறவினர்கள், அப்பகுதியினர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர்  கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது உடல், அங்கு அடக்கம் செய்யப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜெ.அன்பழகன் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close