fbpx
RETamil Newsஇந்தியாஉலகம்

நேபாளத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை – 65-ஆக உயர்வு

நேபாளத்தில் மழை வெள்ளத்தாலும் மற்றும் நிலச்சரிவினாலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை நேபாளத்தில் கனமழை தொடங்கியது. இந்த கனமழையானது தொடர்ந்து பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது இதனால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது.இவ்வாறு சூழ்ந்துள்ள வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.அதனால் மக்கள் வீடுகளை வீட்டு வெளியேறாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது .இதுவரை இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை – 65-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவினால் 38 பேர் காயமடைந்துள்ளனர்.30 பேர் காணாமல் போய்யுள்ளதால் அவர்களை தேடும் பணியுள் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல மக்கள் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தின் 25 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் மற்றும் நிலச்சரிவால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக லலத்பூர், கவரே , கோடாங், போஜ்புர் மற்றும் மகன்பூர் போன்ற மாவட்டங்களில் தான் அதிகஅளவில் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த மழையானது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தொடரும் என்று அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளதால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளதால் அந்நாட்டு அரசு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Related Articles

Back to top button
Close
Close