fbpx
RETamil NewsTrending Nowஇந்தியா

மறுபடியும் முதலில் இருந்து…? கேரளாவில் கொரோனா ரிட்டன்ஸ்…!

Kerala corona cases increasing

திருவனந்தபுரம்:

கேரளாவில் சில வாரங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  நேற்று ஒரே நாளில் 26 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ஆனால் கேரளா கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருந்து பின்னர் பாதிப்பை வெகுவாகக் கட்டுப்படுத்தியது. கேரளாவில் இதுவரை 560 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, அவர்களில் 64 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதே நேரத்தில் சில வாரங்களாக புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு வெளிநாடுகளில் சோதனை இன்றி அழைத்து வரப்பட்டவர்கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close