fbpx
RETamil Newsதமிழ்நாடு

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரனிடம் கேட்கையில், அவர் தென்மேற்கு பருவமழையின் முதல் இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பையொட்டி மழை பதிவாகியுள்ளது.அதாவது ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 3 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான மழை 112 மி.மீ ஆனால் இல்பண அளவு 121 மி.மீ ஆகும்.

ஆனால் மலை பகுதிகள் அடங்கிய கோவை, தேனி ,நெல்லை மாவட்டங்களில் இயல்பை விட 50% மேல் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது.

இதேபோல் தொடர் வெப்பசலனத்தின் காரணமாக அடுத்து வரும் 2 நாட்களுக்கும் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறினார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது .

Related Articles

Back to top button
Close
Close