ஆபத்தை ஏற்படுத்தும் அம்பிகா திரையரங்கம்..அரசு நடவடிக்கை எடுக்குமா..?
திருவள்ளூர் மாவட்டம் ரெட்டில்ஸ் சோத்துப்பாக்கம் சாலையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு சிறப்பாக நடந்து கொண்டிருந்த ஸ்ரீ அம்பிகாதிரையரங்கம்என்னகாரணமோசிலவருடங்களாகமூடப்பட்டுஇருக்கிறது.திரைப்படங்கள்திரையிடப்படுவதில்லைமேலும் சினிமா சூட்டிங் சில நேரங்களில் நடப்பதுண்டு.இந்த சினிமா தியேட்டர் திறப்பதற்கான அறிகுறி இல்லை ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனபடியால் திரையரங்கின் சுவர்கள் மிகவும் பழுதடைந்து இருக்கிறது. அது மட்டுமல்லாது சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கிறது எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் இருப்பதால் திரையரங்கஉரிமையாளர்கள்இதைகவனிக்கவேண்டும்.கவனிப்பதாகதெரியவில்லை.எனவே அரசு அதிகாரிகள் மூலம் மாவட்ட நிர்வாகம் இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லை என்றால் இந்த திரையரங்கம் இடிந்து விழுந்து அருகில் உள்ள வீடுகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?