fbpx
Others

SDPI தமிழ்மாநில பொதுக் குழு – 2023 தீர்மானம்.—சிறப்புசெய்தி

 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி செப்.09 ல் சட்டமன்றம் நோக்கி எஸ்.டி.பி.ஐ. பேரணி   

ஒன்றிய அரசின் திட்டங்களில் 7.50 லட்சம் கோடி இழப்பு – சிஏஜி அறிக்கைக்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும்    கடந்த ஒன்பது ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஏழு திட்டங்கள் குறித்த சிஏஜி அறிக்கையின் மூலமாக ரூ.7.50 லட்சம் கோடிக்கு ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பது வெளிப்பட்டுள்ளது. பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாதைக் கட்டுமானத் திட்டம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலித்தல், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம், எச்ஏஎல் விமான இன்ஜின் வடிவமைப்புத் திட்டம் ஆகிய 7 திட்டங்களில் மட்டுமே ரூ.7.50 லட்சம் அளவுக்கு முறைகேடுகள் வெளிப்பட்டுள்ளதால், மற்ற துறைகள் மற்றும் முந்தைய 8 ஆண்டுகளில் இன்னும் பல லட்சம் கோடிக்கு ஊழல் நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளதால், உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில், சுயாதீனமான விசாரணை மேற்கொள்ள வேண்டும். அரசியல் காரணங்களுக்காக எதிர்கட்சிகளை கண்காணிக்கும் விசாரணை அமைப்புகள், மிகப்பெரும் ஊழல் முறைகேடு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.    முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது வெளியான சிஏஜி அறிக்கை ஆட்சி மாற்றத்துக்கே வழிவகுத்தது என்பதால், தற்போதைய ஆட்சியின் சிஏஜி அறிக்கை குறித்து விசாரணை மேற்கொள்வதோடு, முறைகேடுக்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும்.

Related Articles

Back to top button
Close
Close