தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜுன் 1-ம் தேதி திறப்பு ; கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன்.
சென்னை ;
ஜுன் 7-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அதற்க்கு மாற்றமாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஜூன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். பள்ளிகளில் கழிவறைகளை சுத்தமாகவும், பழுதுகள் இருந்தால் அதனை சரிசெய்தும் வைத்திருக்க வேண்டும்.
பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மையாக பராமரிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் புதர்கள், கழிவு பொருட்கள் இல்லாதவாறு தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
10, 11, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதை முன்னிட்டு ரேங்க் முறையை பின்பற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தக்க அறிவுரை வழங்க வேண்டும்.
அரசாணைப்படி செயல்படாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது
மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் இவ்வாறு அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.