fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

தனுஷ்கோடியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு..! ஊடுருவலை தடுக்க நடவடிக்கை!

coast guard security beefed in dhanushkodi

ராமேஸ்வரம்:

ஊடுருவலை தடுக்க தனுஷ்கோடியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் இலங்கை கடல் பகுதி உள்ளதால், கடல்அட்டை மற்றும் போதை பொருட்கள் படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படுவது நடக்கிறது.

இந் நிலையில் கொரோனாவால் இலங்கையிலும் அதிக பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் யாரேனும் அகதிகள், கடத்தல்காரர்கள் போன்று வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

எனவே, இருக்கவும் ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் வழியாக நடைபெறும் கடத்தலை தடுக்கவும் கண்காணிக்கும் பணியில் இந்திய கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மண்டபம் பகுதியில் உள்ள கடலோர காவல்படை நிலையத்திற்கு சொந்தமான தரையிலும் தண்ணீரிலும் செல்லும் ஹோவர்கிராப்ட் கப்பல் தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே நடுக்கடலில் நிறுத்தி இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கியுடன் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுதவிர ராமேசுவரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளில் சிறப்பு தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close