சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு கொரோனா..?

சென்னை:
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு கொரோனா உறுதியானது.
அதைத்தொடர்ந்து அவர் தன்னை தனிமைபடுத்தி கொண்டுள்ளார்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீனாக இருந்து வருபவர் ஜெயந்தி.
இவர் தலைமையில் தான் , கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், முதல் நிலை மாணவர்கள் என 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதேபோல், டீன் ஜெயந்திக்கும் கொரோனா உறுதியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், அவர் வீட்டிலேயே தன்னை தனிமைபடுத்தி கொண்டதாக தகவல் வருகிறது.
கடந்த 12ம் தேதி, மருத்துவ விடுப்பில் செல்வதாக தொலைபேசி மூலம் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபுவுக்கு தகவல் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், ஜெயந்திக்கு பதிலாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் புதிய டீனாக பேராசிரியர் டாக்டர் நாராயணசாமி இப்பொழுது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
















