RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

அமாவாச நீயா பேசுற!;பா ஜ க நாராயணனின் ஆச்சரிய ட்வீட்!!

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பரவ காரணம்  தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களால்தான் என்ற விமர்சனம் எழுந்து வரும் நிலையில்,

பாஜக பிரபலம் நாராயணன் திரிபாதி தனது டுவிட்டர் பக்கத்தில் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக டுவிட்டுக்களை பதிவு செய்துள்ளது,

‘அமாவாச நீயா இப்படி பேசுற!’ என்று அனைவரின் மூக்கிலும் விரல் வைக்க தோன்றுகிறது.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது;

தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்த பலருக்கு தமிழகத்தில்
கொரோனா தொற்று பரவியதை அறிவோம். ஆனால், சிகிச்சைக்கு பின் அவர்கள் செய்ய முன்வந்திருக்கும் மிக பெரிய உதவியை நாம் அறிவோமா?

திருப்பூரை சேர்ந்த முகமது அப்பாஸ் என்பவர், சிகிச்சைக்கு பின்னர், அம்மாவட்ட நிர்வாகத்திடம் மற்றவர்கள் யாருக்கேனும் சிகிச்சையளிக்க தன்னுடைய
ரத்தத்தை ‘ஊநீர்’ (Plasma) தேவைப்படுமானால் தான் வழங்க தயார் என முன்வந்துள்ளார்.

தேனியை சேர்ந்த முகமது உஸ்மான் அலி என்பவர் என்பவர் “தான் மட்டுமல்ல தன்னுடன் பாதிக்கப்பட்ட அனைவருமே ‘ஊநீர்’ தானம் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

டில்லியில் நேற்று நடைபெற்ற ஒரு ஊநீர் சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

பிளாஸ்மா தெரபி’அல்லது ஊநீர் சிகிச்சை என்பது என்ன? ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பாடு.

இதன் அடிப்படையில் கோவிட்19 நோயில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிரணுக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகள் உடலில் செலுத்தப்படும்போது,

அவர்கள் உடலில் உள்ள கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி அழிக்க அது உதவியாக இருக்கும்.

தங்களின் ஊநீரை தானம் செய்யத்தயாராயிருக்கும் அனைவருக்கும் என் நன்றிகளும், பாராட்டுக்களும்.

இவ்வாறு நாராயணன் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close