விவசாய நில கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை

நீலகிரியில் தற்போது வெயிலின் தாக்கம் வாட்டி எடுக்கும் நிலையில் வனவிலங்குகளும், பறவைகளும் உணவு, தண்ணீர் தேடி அலைகின்றனர்..

இவ்வாறு இருக்கையில் அருகிலுள்ள கிராமங்களுக்கு விலங்குகளின் அவ்வப்போது வருவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது.
இவ்வாறுதான் உதகையில் அருகில் குந்தா வனப் பகுதிக்கு உட்பட்ட மட்டகண்டி கிராமத்தில் விவசாயிகள் விளை நிலங்களின் பாதுகாப்புக்காக கம்பிவேலி அமைத்துள்ளனர்.
இன்று காலையில் அங்குள்ள வனப்பகுதியில் இருந்து பெண் சிறுத்தை ஒன்று உணவு தண்ணீர் தேடி அப்பகுதி வழியே வரும்போது,
அங்குள்ள கம்பி வேலி தாண்டிய போது சிறுத்தையின் இரண்டு பற்கள் அங்கு அமைந்துள்ள கம்பி வேலியில் சிக்கி கொண்டது.
சிறுத்தையின் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் விரைந்து வந்து பார்க்கும்போது சிறுத்தை நிலையை கண்டு அங்கு உள்ள வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை வலைமூலம் மீட்டு அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டனர்.
கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மக்களை அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் நிலையில் கோடை காலம் நெருங்கி கொண்டு செல்வதால் தண்ணீர் இன்றி வனவிலங்குகள் தவிக்கின்றது….
விவசாயித்திற்கு முதுகெலும்பு விலங்குகள் என்று வாழ்ந்தனர் நம் முன்னோர்கள்.
இன்று காடுகளை அழித்து வாழ்கின்றன மக்கள்.
காடுகள் அழிக்கப்பட்டதால், வாழ இடம் இல்லாமல் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே செல்கிறது.
அழிவில் விழிம்பில் உள்ள வனவிலங்குகளை காப்பாற்றவும், பாதுகாக்கும் கடமையில் இன்று நாம் இருக்கிறோம் .
V. NandhiniPrakash















