fbpx
RETamil Newsஅரசியல்உலகம்

ஏமனில் நடத்தப்பட்டது வான்வழி தாக்குதல் – அல் கொய்தா தளபதி தாக்கப்பட்டு பலி

ஏமன் நாட்டில் உள்ள அல் பய்டா மாகாணத்தின் சில இடங்களை அல் கொய்தா இயக்கம் கைப்பற்றி அங்கு ஆதிக்கம் செய்து வருகிறது. அவ்வாறு ஆதிக்கம் செய்யப்படும் இந்த உள்ளூர் அல் கொய்தா இயக்கத்தின் தளபதியாக படாவி உள்ளார்.

இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு அக்டோபரில் எரிபொருள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த யூ.எஸ்.எஸ்.கோல் என்ற அமெரிக்க போர் கப்பலின் மீது நடத்தப்பட்ட ஆயுத தாக்குதலில் தொடர்புடையவர்.இவ்வாறு நடத்தப்பட்ட ஆயுத தாக்குதலால் 17 அமெரிக்க சிப்பந்திகள் படாவியால் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் அல் கொய்தா இயக்கத்தின் ஆதிக்கம் நடத்தப்பட்டு வரும் அல் பய்டா பகுதி வழியாக படாவி ஒரு தனி வாகனத்தில் வருவதை அறிந்த அமெரிக்க படையினர் , தீடிரென அவர் மீது வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் அவர் கொல்லப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

ஆனால் இன்னும் இந்த சம்பவத்தை ஏமனை சேர்ந்த அல்கொய்தா இயக்கம் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை .

Related Articles

Back to top button
Close
Close