GeneralRETamil NewsTrending Nowஉலகம்
78 லட்சம் பேர்…! உலகளவில் கொரோனாவில் குணமானவர்களின் எண்ணிக்கை!
78 lakh patients cured from corona worldwide

ஜெனீவா:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 78 லட்சத்தைக் கடந்துள்ளது.
சீனாவின் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந் நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 78 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.33 கோடியை தாண்டியுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5.78 லட்சத்தைக் கடந்துள்ளது
















