fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

மத்திய அரசு ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் – தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்

நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் 10 அம்சகோரிக்கைகளை முன்வைத்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்து காலை முதலே இந்த போராட்டம் தொடங்கியது நாளையும் இந்த போராட்டம் தொடரும் என்று கூறப்படுகிறது. இந்த போராட்டத்தில் 20 கோடிக்கும் மேல் அரசு ஊழியர்கள் பங்கேற்கப்போவதாகவும், டெல்லியின் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த போராட்டம் அனைத்து தொழில்சங்ககளின் பொது வேலை நிறுத்தம் என்பதால் தமிழகத்திலிருந்து கேரளா , கர்நாடக செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நடத்தப்படும் இந்த போராட்டம் கீழ்காணும் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து செய்யப்படுவதாகும்; அவை , ” விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தல், அணைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்குதல், குறைந்த பட்ச கூலியாக ரூ.18 ஆயிரம் என நிர்ணயம் செய்தல் ‘ ஆகியவையாகும்.

நாடு முழுவதிலும் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் துவங்கியுள்ளதால் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக ,கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் செல்கின்றன. அரசு ஊழியர்களின் போராட்டத்திற்காக அம்மாநில அரசு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் மாநில எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்திலிருந்து வரும் பேருந்துகளும் புளிஞ்சூர் எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது,ஆனால் கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றது.

அதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடக செல்வதற்கு இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் அம்மாநில எல்லையான ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இரு மாநிலத்திற்கு இடையே அரசு பேருந்துகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடலூரில் இருந்து புதுவை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.இதனால் கடலூரிலிருந்து புதுவை செல்லவேண்டிய நோயாளிகளும்,பணிக்கு செல்லவேண்டியவர்களும் பெரும் அவதிப்பட்டனர்.

மும்பையிலும் கடுமையாக பேருந்து சேவை பாதிக்கப்பட்டுஉள்ளது.

வேலைநிறுத்த ஆதரவாளர்களும் , தொழில்சங்கத்தை சேர்ந்தவர்களும்,கொல்கத்தாவின் பிர்ஸாத் பகுதியில் சென்ற பள்ளிக்கூட வாகனத்தை தாக்கினர். இதில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் அலறியடித்தனர். இதை அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து அந்த பள்ளிக்கூட பஸ்சை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.மற்றும் கேரளாவில் தனியார் வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டது.

மேலும் இது போன்ற ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நாட்டின் அனைத்து முக்கிய இடங்களில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுமுழுவதிலும் உள்ள சுமார் 6 லட்சம் வாங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளப்போவதால் வங்கி சேவை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்று என்று அரசு தரப்பின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close