fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களே… இனி கவலை வேண்டாம்…! உங்களுக்கு தான் இந்த செய்தி…!

170 flights ready for vande bharat 4th mission

டெல்லி:

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து வர 170 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 23ம் தேதி முதல் உள்நாட்டு, வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் 4வது கட்டத்தில் எத்தனை விமானங்கள் இயக்கப்படுகின்றன? அவை எப்போது என்பன போன்ற விவரங்களை மத்திய விமானப் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

4வது கட்ட வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, கென்யா, இலங்கை, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், சவுதி அரேபியா, வங்கதேசம், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, மியான்மர், ஜப்பான், உக்ரைன், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட இருக்கிறது.

இதற்காக ஜூலை 3ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், 170 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையே 38, இந்தியா-அமெரிக்கா இடையே 32, இந்தியா-சவுதி அரேபியா இடையே 26 விமானங்கள் இயக்கப்பட உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close