10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
2014-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பெரிய குளத்தில் 10 வயது சிறுமி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவரது உடல் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது.
விசாரணையின் போது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யபட்டது தெரியவந்தது. இது குறித்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளியானது. இந்த வழக்கில் குற்றவாளிகள் சுந்தர் ராஜ், ரூபின், குமரேசன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கபடும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் 10 வயது சிறுமியின் தாயாருக்கு கருணைத்தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.