fbpx
RETamil Newsஉலகம்

ஜெர்மனியில் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் – தொடங்கியது டாக்டர்களின் நிர்வாண போராட்டம்

உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த கொரோனா வைரசால் பல நாடுகள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். இததுவரை உலக அளவில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, இஸ்பெயின் , பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன .இந்நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியுல் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். 6 ஆயுரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் இது மற்ற ஐரோப்பிய நாடுகளை பார்க்கும் போது மிக குறைவாகும் அதற்க்கு காரணம் அந்நாட்டு மருத்துவர்களின் அயராத உழைப்பாகும். மக்களை இந்த வைரஸிடமிருந்து போராடி காப்பாற்றும் முதல் வீரர்களாக அந்நாட்டு மருத்துவர்கள் விளங்குகின்றனர்.

ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் கொரோனவுக்கெதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததையடுத்து,மருத்துவர்கள் நிர்வாண செல்பிகளை எடுத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அவர்கள் இந்த நிர்வாண செல்பிகளை வெளியிட்டு வருகிறார்கள். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் கோரியும் எந்த பலனும் இல்லாததை ஜெர்மன் அமைச்சர்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் அவர்கள் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

எங்களிடம் இருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் செலவழித்து போனால் நாங்கள் இப்படித்தான் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்யும் இந்த எதிர்ப்பை நிர்வாண குவால்ஸ் என்று அழைக்கிறார்கள். சிலர் கேட்கலாம் இவ்வாறு நிர்வாணமாக இருப்பது கூச்சமாக இல்லையா என்று காயங்களுக்கு தையல் போட பயிற்சி பெற்றவர் மருத்துவர்கள் நாங்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது ஏன் எங்களது முகத்தை மூட வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த கொரோனா பரவளின் போது , பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணிக்கு செல்வது நிர்வாணமாக செல்வதற்கு சமம் என்று கூறுகிறார்கள்.

மேலும் ஒரு பக்கம் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை அதிகரித்தாலும் , கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இன்னும் அவற்றின் பற்றாக்குறை நீங்காமல் உள்ளது.

முகக்கவசம், கண்கண்ணாடிகள், கையுறைகள் மற்றும் ஏப்ரன்கள் என மருத்துவர்கள் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளதால் , தங்களின் கோரிக்கைகள் இன்னும் பூர்த்திசெய்யபடவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close