fbpx
Others

தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம்—சிறப்பு செய்தி.

தேனிமாவட்டம்மெய்வழி மக்கள் இயக்கம் – மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் சின்னமனூர் நகராட்சியில் கோரிக்கை மனு!!! தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் சின்னமனூர் நகராட்சியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதுநிறுவனத் தலைவர் வழக்கறிஞர் வேதம் சந்திரபோஸ் அவர்களின் ஆணைப் படியும் தேனி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி அவர்களின் பரிந்துரையின்படியும் மாவட்ட செயலாளர் தினேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில் மாவட்ட அவைத் தலைவர் முத்து அவர்களின் தலைமையில் சின்னமனூர் நகராட்சியில் உள்ள மின் மயானம் முறையாக பராமரிக்கப்படாததால் பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் இல்லாமல் சடலம் ஒன்றுக்கு ரூபாய் 5100 வீதம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் , மேலும் விறகு பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு மக்களுக்கு நோய் ஏற்படக் கூடிய அபாய நிலையை தடுக்க வேண்டும் என்றும், சின்னமனூர் நகராட்சியில் ஆணையாளர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.. உடன் மாவட்ட இளைஞரணி தலைவர் ஈஸ்வரன் மகளிர் அணி தலைவி ஜெயலீலா துணைத் தலைவி அமுதா ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி நகரச் செயலாளர் அருள் மற்றும் சமூக ஆர்வலர் பரிமளக்கண்ணன் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்வு….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close