fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

ஊரடங்கு ஜூன் 30 வரை நீடிப்பு…? ‘சிம்பாலி’க்காக சொன்ன ரயில்வே அமைச்சகம்

Train services suspended till june 30th

டெல்லி:

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் 78,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு  குறைவதாக தெரியவில்லை.

வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ஜூன் 30 வரை ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த ரயில் டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதேநேரம் சிறப்பு ஷ்ராமிக் ரயில்கள் தொடர்ந்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு முழு டிக்கெட் கட்டணமும் பயணிகளுக்குத் திரும்ப அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தேசிய ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆகவே தான் இந்த நடவடிக்கை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close