fbpx
Others

ராம் குமார்.வீ தலைவர் இந்திய சுயராஜ்ய கட்சி —

ராம் குமார்.வீ  தலைவர்இந்திய சுயராஜ்ய கட்சி

தமிழக விவசாயிகள் ஒரே மாதிரியான சிந்தனையை கொண்டே செயல்படுகின்றனர்.ஒரேமாதிரியானவிவசாயத்தைமேற்கொண்டு அதைநம்பியேவாழ்ந்துவருகின்றனர்.குறிப்பாகசொட்டுநீர்பாசனம்    என்பதுபழங்காலமுறையாகும்இந்தபாசனமுறைக்குநமதுவிவசாயிகள் 100%தயாராகஇல்லை.அரசாங்கம்ஒருபக்கம்விவசாயிகளைஅலைக்கழித்துசீரழிக்கின்றது, மறுபுறம் விவசாயிகள் சரியான வழிகாட்டி இல்லாமல் சரியான பாதை தெரியாமலும் விவசாயம் தான் என்ன என்று தெரியாமல் கஷ்டப்பட்டு நிற்கின்றனர். இந்த நிலை கட்டாயமாக மாற வேண்டும். விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டி அரசு சார்பில் இருக்க வேண்டும். விவசாயிகள் நஷ்டம் அடைந்தால் அரசுக்கும் நஷ்டம், லாபம் அடைத்தால் அரசுக்கும் லாபம், இது ஏன் அரசுஉணராமல்இருக்கின்றதுஎன்றுதெரியவில்லை.முக்கியமாக விவசாயிகளுக்கு லேட்டஸ்ட் அட்வான்ஸ் டெக்னாலஜி இவை எதுவும் விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை, அவர்கள் விழிப்புணர்வு அடையவில்லை, லேட்டஸ்ட் டெக்னாலஜி இருந்தால் மட்டுமே விவசாயம் செய்து லாபத்தை ஈட்டி வறுமையை போக்கும். பாசமலர் படத்தையே திரும்பத் திரும்ப பார்க்க முடியுமா❓ அது தான் இன்றைய விவசாயிகள். 1960இல் இருந்து பாசமலர் போய் இன்று DUDE படம் வந்துவிட்டது, சிவாஜி போய் இன்று பிரதீப் ரங்கநாதனில் வந்து நிற்கிறது தமிழ் சினிமா. இதுதான் வளர்ச்சி. இதுதான் இன்றைய விவசாயிகளுக்கு தேவையானவை. விவசாயிகள் இன்றும் பாசமலர் டெக்னாலஜி உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அதனால்தான் அவர்களால் எந்த மேம்பாடு அடைய முடியவில்லை. மண் என்று பொன் தங்கம் மிகப்பெரிய அளவில் கொட்டிக் கிடக்கின்றது அதை எப்படி அவர்களால் சரியாக நிர்வாகம் செய்து லாபத்தை பார்க்க முடியும் என்று தெரியாமல் இருக்கின்றனர்.இன்றைய விவசாய முறை முழுவதாக மாறிவிட்டது. எந்த மேடையில் எக்கால சூழ்நிலைக்கும், எப்பேர்பட்ட இயற்கை சீற்றங்களிலும், தாக்குபிடிக்க இன்றைய விவசாய முறை வந்துவிட்டது. அவை அனைத்தையும் ஒரு தனி மனித விவசாயி சென்று சேர முடியவில்லை இது தான் இன்றைய விவசாயி போராட்டத்திற்கு மாபெரும் காரணம். எனவே கடைசி கடைசியாக நம்மால் முடிந்த உதவியை அனைத்தும் விவசாயிகளுக்கு செய்வோம். புதிய தொழில்நுட்பத்தை அவர்களுக்கு சென்று சென்று சேர அவர்களுக்கு நாம் உதவிகளை செய்ய வேண்டும்.ஒரு வாய் சோறு சாப்பிடும் நாம் அதை விதைக்கின்ற விவசாயியை பற்றி சிந்திப்பதில்லை. மார்க்கெட்டில் இருந்து கருவேப்பிலை போல் கொத்தவரங்காய் முதல் ஸ்பேர் பீன்ஸ் தக்காளி பருப்பு தொடர்ந்து அனைத்தும் நமக்கு வேண்டும் ஆனால் விவசாயிகள் படும் கஷ்டம் நாம் அறிந்திருக்க வேண்டாம். இது நமது அரசு மற்றும் நம்முடைய கடமையாகும்.விவசாயி செழித்தால்தான்நாடு செழிக்கும்..
விவசாயி – விவசாயம் காப்போம்

Related Articles

Back to top button
Close
Close