fbpx
RETamil Newsஉலகம்

ஓசோன் படலத்தின் மிகப்பெரியத் துளை காற்றுமாசுபாடு குறைபாட்டால் தானாக மூடியது

ஓசோன் எனப்படும் ஆக்சிஜன் படலமானது , சுற்றுசூழல் சமநிலையை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.மேலும் சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை பூமிக்கு வராமல் தடுக்கும் இயற்க்கை அரணாக ஓசோன் படலம் திகழ்கிறது.

ஆனால் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, தொழிற்ச்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட காற்றுமாசுகளால் ஓசோன் படலத்தில் கடந்த காலத்தில் அங்கங்கே பெரிய பெரிய துளைகள் ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் , கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்தியா உள்ளிட்ட உகலகின் அனனத்து நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவியதால் பல நாடுகளில் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இவ்வாறு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பல்வேறு நாடுகளில் இயங்கி வந்த தொழிற்ச்சாலைகள் கால வரையின்றி மூடப்பட்டன. அணைத்து வாகன போக்குவரத்தும் முடக்கிவிடப்பட்டன.இதனால் பூமியிலிருந்து வெளியாகும் மாசுகளின் அளவும்கணிசமாக குறைந்தது.

பூமியில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால் ஓசோன் படலத்தின் துளைகலின் அளவுகள் குறைந்துள்ளதா என்பது குறித்து அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞனிகள் கடந்த மாதம் ஆராய்ச்சி செய்தனர்.ஆனால் பூமியின் வட துருவமான ஆர்ட்டிக்கின் மேற்கு பகுதியில் இருக்கும் ஓசோன் படலத்தில் , ஒரு கிலோமீட்டர் அளவில் பெரிய துளை புதிதாக உருவாகியிருந்தது.மேலும் இந்த துளையானது தென் துருவத்தை நோக்கி விரிவடைந்து வந்தது. இந்த தகவலானது உலக மக்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த துளை தொடர்பாக செயற்கைகோள் உதவியுடன் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது அனைவரையும் ஆச்சரியப்படவைக்கும் விதமாக ஓசோனில் ஏற்பட்டிருந்த அந்த ராட்ச துளை தானாக மூடிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுள்ளது.

இவ்வாறு ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கொண்டதற்கு,, பூமியிலிருந்து வெளியாகும் காற்று மாசுபாடு அளவு குறைந்ததேகாரணம் என சுற்றுசூழல் ஆய்வாளர்கள் கருத்துதெரிவித்தனர். ஆனால் இந்த கூற்றினை வல்லுநர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

ஓசோனில் மிகப்பெரிய துளை ஏற்பட்டதும் பின்னர் தற்போது அது தானாக மறைந்ததும்  போலார் வோர்டெக்ஸ் எனப்படும் வாயு சுழற்ச்சியே காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close