fbpx
Tamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் – வேதாந்தா தலைவர் அருண் அகர்வால் நம்பிக்கை….

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் போராட்டத்தினால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, மிக விரைவில் திறக்கப்படும் என வேதாந்தா குழும தலைவர் அணில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். அந்த போராட்டங்களையும், அவர்களின் கோரிக்கைகளையும் துரித படுத்தாத தமிழக அரசு, மிகப்பெரிய மக்கள் போராட்டத்துக்கு பிறகு கோரிக்கையை நிறைவேற்றியது. ஆனால், அதற்காக 13 பேர் தங்கள் இன்னுயிரை இழக்க நேரிட்டது.

இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது. அதனை எதிர்த்து வேதாந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், வேதாந்தா குழுமத்தின் ஒன்றான ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசிய அதன் தலைவர் அணில் அகர்வால், மிக விரைவில் ஆலை திறக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேசமயம், தமிழகத்தில் இன்று தான் 3 இடங்களில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close