fbpx
உலகம்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பார்க்கர் விண்கலம்!

சூரியனை ஆய்வு செய்வதற்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள பார்க்கர் விண்கலத்தை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

பார்க்கர் விண்கலத்தின் சிறப்பம்சம்:

பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியனை எந்த உயிரினத்தினாலும் நெருங்கவே முடியாது. சூரிய வளிமண்டலத்தில் உள்ள பல மர்மங்களை பற்றி அறியவும், சுட்டெரிக்கும் சூரியனின் மைய பகுதியில் என்ன உள்ளது என்பதை பற்றி அறியவும் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு சென்று அங்கிருந்து அறிய புகைப்படங்களையும் எடுத்து பூமிக்கு அனுப்பும் என நாசா தெரிவித்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட விண்கலத்தில் சூரியனுக்கு மிக அருகில் செல்லப்போகும் விண்கலம் இதுவே ஆகும். சூரியனுக்கு அருகே சுமார் 60 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பார்க்கர் விண்கலம் நிறுவப்பட உள்ளது என நாசா விஞ்ஞாணிகள் தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு பார்க்கர் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் சூரியனுக்கு அருகில் சென்றடையும், மேலும் 7 ஆண்டுகள் ஆய்வை மேற்கொள்ளும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

 

பார்க்கர் விண்கலத்தின் பணிகள்:

நாசா கடந்த 2006-ஆம் ஆண்டு ஸ்டீரியோ(STEREO) என்ற இரு செயற்கைக்கோளை சூரியனின் கிரோனா பகுதியை ஆய்வு செய்ய அனுப்பியது. பூமியில் இருந்து காணமுடியாத சூரியனின் பல அம்சங்களை இந்த இரு செயற்கைகோள்கள் படமெடுத்து அனுப்பி வருகின்றன.

அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்டுள்ள பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு மேற்கொள்ளும், மேலும் 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சுட்டெரிக்கும் சூரியனின் மிக அருகாமையில் சென்று ஆய்வினை மேற்கொள்ளும் என நாசா விஞ்ஞாணிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்தால் பொசுங்கிவிடாமல் இருக்க பார்க்கர் விண்கலம் கார் வடிவத்தில் உருவமைக்கப்பட்டுள்ளது.

“டெல்டா ஹெவி” எனும் மிக சக்தி வாய்ந்த ராக்கெட் இந்த விண்கலத்தை சுமந்து சென்று விண்ணில் செலுத்தியது.

Related Articles

Back to top button
Close
Close