fbpx
Others

மு.க.ஸ்டாலின்–திருச்சி சிவா தி.மு.க. துணைப் பொதுசெயலாளராக நியமனம்..

கட்சியில் புதிய பொறுப்பு: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் திருச்சி  சிவாபொன்முடி பதவி பறிக்கப்பட்ட நிலையில் திருச்சி சிவாவை துணை பொதுச்செயலாளராக நியமித்து மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அமைச்சரும் கட்சியின் துணை பொது செயலாளருமான பொன்முடி அவர் வகித்து வரும் துணை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில்,இது தொடர்பாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கழக சட்டதிட்ட விதி: 17 – பிரிவு 3-ன்படி கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா எம்.பியை , அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, தி.மு.க. துணைப் பொதுசெயலாளராக நியமிக்கப்படுகிறார்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close