fbpx
RETamil Newsஅரசியல்உலகம்

வரலாற்றில் இதற்கு முன்பு நடந்ததை திரும்பிப்பார்க்க நேரிடும் – ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

அமெரிக்காவிடம் மோதுவது குறித்து இனி ஈரான் சிந்தித்து கூட பார்க்க கூடாது என்று ஈரான் அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே இரண்டு நாட்டு உறவிலும் பெரிய பிரச்சினை நிலவி வருகிறது.

ஈரானை அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அணு ஆயுதம் வைத்து இருப்பதாக கூறி, ஈரான் மீது இரண்டாவது முறையாக அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது.

மேலும் ஈரானில் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதை நட்பு நாடுகள் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இந்த நிலையில்தான், அதிபர் டிரம்ப், தனது டுவிட்டர் பக்கத்தில், ஈரான் அதிபர் ரௌஹானிக்கு, அமெரிக்காவை இன்னொரு முறை மிரட்டி பார்க்க வேண்டாம்.

இல்லையென்றால், வரலாற்றில் இதற்கு முன்பு நடந்தது போன்ற சம்பவங்களை மீண்டும் அனுபவிக்க நேரிடும்.

உங்களுடைய வன்முறையான வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருக்கும் பழைய அமெரிக்கா கிடையாது இது. கவனமாக இருக்குங்கள் என்று போர் தொடங்கும் பாணியில் மிகவும் கோபமாக எழுதியுள்ளார் டிரம்ப்.

Related Articles

Back to top button
Close
Close