RETamil Newsஅரசியல்இந்தியா
ரயில்வே துறையில் கூடுதலாக 32 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு: அமைச்சர் பியூஸ் கோயல்
ரயில்வே துறையில் ஏற்கனவே அறிவித்தது போக கூடுதலாக 32000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், பயணிகள் பாதுகாப்பு தொடர்பான 63,907 பணியிடங்கள் உட்பட 99 ஆயிரம் பணியிடங்களுக்கு ஏற்கனவே ஆள்சேர்ப்பு நடைபெற்றுவருவதாக தெரிவித்தார்.
கூடுதலாக 32 ஆயிரம் காலியிடங்களுக்கு ஆள்தேர்வு குறித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவை அனைத்தும் நிரந்தர பணியிடங்கள் என அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.