fbpx
HealthTamil News

ரத்த சோகைக்கு சிறந்த மருந்து பசலை கீரை !

வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஊட்டச் சக்தியாக கீரைகளிலும் காய்கறிகளிலும் இயற்கை நமக்கு வழங்குகின்றது.

இந்த பசலைக்கீரையில் அமினோஅமிலங்கள், வைட்டமின்கள், கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள் மற்றும் பைபிளேவனாய்டுகள் உள்ளன. வைரசுக்கு எதிராக செயல்படும் ‘கிளைக்கோ’ எனும் புரதம் ஒன்றும் காணப்படுகிறது.

பாலக்கீரை என அழைக்கப்படும் பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, இதில் உள்ள இரும்புச் சத்து சுலபமாக ஜீரணமாகி உடம்பில் சேர்கிறது. எனவே ரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகின்றது.

இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது. புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன.

இரத்த விருத்தியை அதிகரிக்கும். சோடியம், போலாசின்,கால்சியம் உள்ளன. ஆனால் கொழுப்பு சத்து இல்லை.

பசலைக்கீரை மலத்தை நன்றாக இளகச் செய்கின்றது. உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. எரிச்சலைத் தணிக்கின்றது.

நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கீரை மிகவும் சிறந்தது. ஏனெனில் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது.

புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது. பாலக் கீரை ரத்த சிவப்பு அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்வதால் இது அனிமீயா நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதியளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும். பாலக்கீரையில் வைட்டமின் “ஏ”அதிக அளவு நிறைந்து காணப் படுகிறது.

இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் “கே” அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருக்க உதவுகின்றன.

இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை உதவி செய்கின்றன. இதனை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிடலாம்.

பாலக்கீரை புளி, தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வேகவைத்து கடைந்து சாதத்துடன் சாப்பிடலாம். சுவையுடன் ஆரோக்கியமும் கிடைக்கும். வாரத்திற்கு ஒருமுறை கீரை சமைத்து சாப்பிடுவது உடலுக்கு சிறந்த மருந்து.

Related Articles

Back to top button
Close
Close