”மொழியில், இனிமையானது தமிழ்,” என புகழாரம் – கவர்னர் பன்வாரிலால் புரோஹித் !!!
”மொழியில், இனிமையானது தமிழ்,” என, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று மாலை, சென்னை, கிண்டியில் உள்ள, காந்தி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித், வலிமையான இந்தியாவை உருவாக்க, மகாத்மா காந்தி அரும்பாடுபட்டார். மத நல்லிணக்கத்தை போதித்தார். அவரை போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசு காந்தி ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்தி வருகிறது. மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக விழா அமைவது அவருக்கு செய்யும் சிறப்பு. தமிழ் மொழி இனிமையானது. மாணவர்களின் தனித்திறமையை வளர்க்க, கல்வித் துறையில், பல திட்டங்களை சேர்ப்பது அவசியம். இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.
மேலும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தித்துறை அமைச்சர் ராஜு மற்றும் அதிகாரிகளும், மாணவ, மாணவியரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காந்தி மண்டபத்தில், மகாத்மா காந்தி குறித்த புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியை பொதுமக்கள் இரண்டு நாட்கள் பார்வையிடலாம்.