fbpx
HealthTamil News

மூட்டு வலிக்கான இயற்க்கை வைத்தியங்கள் !

மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேல் ஆண், பெண் என்ற பேதமின்றி அனைவருக்கும் ஏற்படுகிறது. மூட்டுகளில் வலி உண்டானால் சமைப்பது, வீட்டு வேலைகளை செய்வது போன்ற அன்றாட வேலைகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. ஏன் நடப்பதற்கு கூட மிகவும் சிரமப்படுபவர்களை நாம் நமது தினசரி வாழ்க்கையில் கண்டிருப்போம்.

எத்தனை பணம் செலவழித்தாலும் பரவாயில்லை இந்த மூட்டு வலி மட்டும் போனால் போதும் என்று தான் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த மூட்டுவலிக்கான தீர்வை தேடி நீங்கள் எங்கேயும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. உங்களது அருகிலேயே இருக்கும் சில மூலிகைகளே இதற்கு மருந்தாக அமைகின்றன.

எருக்கு:
எருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டி மூட்டு வீக்கங்களின் மீது வைத்து சிறிது நேரத்திற்கு கட்டி வைத்தால் வீக்கம் குறையும்.

கொய்யா இலை:
கொய்யா இலைகளை நன்றாக விழுது போல அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பூசி வந்தால் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் குறையும்.

ஆமணக்கு வேர்:
ஆமணக்கு வேரை நன்கு சுத்தம் செய்து 4 லிட்டர் தண்ணீர் விட்டு 1 லிட்டராக வற்றும் வரை நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து நீர் முழுவதும் ஆவியாகி எண்ணெய் மட்டும் இருக்கும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் அந்த எண்ணெயை வடிகட்டி மூட்டுகளில் தடவி வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகியவை குறையும்.
உபயோகிக்கும் முறை:
இந்த எண்ணெயை தினமும் குளிப்பதற்கு முன்னர் மூட்டுகளில் நன்றாக தேய்த்து 15 நிமிடங்களுக்கு பிறகு குளியுங்கள். குளித்த பின்னர் இந்த எண்ணெயை மீண்டும் மூட்டுகளில் தேய்த்து மூட்டுகளை துணியால் நன்றாக கட்டி வைத்து வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் குறையும்

பால்:
சூடான பாலில் 3 ஏலக்காயை உடைத்துப் போட்டு, சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து தினமும் இரவில் குடித்து வந்தால் மூட்டு வலி குறையும்.

கஸ்தூரி மஞ்சள்
கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்.

அஸ்வகந்தா:
அஸ்வகந்தா பொடி 5 கிராம் எடுத்து 40 மில்லி பால் சேர்த்து 160 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து, நீர் வற்றி பால் மட்டும் தங்கும் போது எடுத்து குடிக்க மூட்டுவ‌லி க‌ட்டுப்ப‌டும்.

Related Articles

Back to top button
Close
Close