fbpx
HealthTamil News

மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிமுறைகள்

மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய இயற்க்கை வழிகள்:

1. ஒரு பௌலில் எலுமிச்சை சாற்றினை எடுத்து, காட்டன் பயன்படுத்தி, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 2-3 நிமிடங்கள் கழித்து, நீரால் முகத்தைக் கழுவுங்கள். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.

2. 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சில
நிமிடங்கள் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இதனால் முகத்தில் உள்ள
கரும்புள்ளிகள் அகலும்.

3. ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை: ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில்
சேர்த்து கலந்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, விரலால் சில நிமிடங்கள் தேய்த்து விடுங்கள்.

4. ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன்
வால்நட்ஸ் பொடியுடன், 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின்
தண்ணீர் தொட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்
அகலும்.

5. தேன் மற்றும் பட்டை: ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பட்டை தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட்
செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, அதன் மேல் ஒரு சுத்தமான காட்டனை வைத்து, 5 நிமிடம் கழித்து காட்டனை நீக்கி, முகத்தை நீரால் கழுவிடுங்கள். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.

Related Articles

Back to top button
Close
Close