முட்டை நூடுல்ஸ்!
தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் -1 பாக்கெட்
வெங்காயம் -1 நறுக்கியது
பீன்ஸ் -7-8
கேரட் -1
தக்காளி -3 நறுக்கியது
வெங்காய தாள் – 1/4 கப் நறுக்கப்பட்ட
தக்காளி சாஸ் -2 டீஸ்பூன்
முட்டை-2
எண்ணெய் -4 தேக்கரண்டி
தேவையான உப்பு
மிளகு தூள் தேவையான அளவு
அரைத்துக்கொள்ள:
இஞ்சி விரல் அளவு
பூண்டு 5 பல்
சிவப்பு மிளகாய்-5
வெங்காயம் 1/2
செய்முறை:
ஒரு அகலமான கடாயில் தண்ணீர் விட்டு ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும்போது நூடுல்ஸ் சேர்த்து 4-5 நிமிடம் வேகவிடவும். பின் நூடுல்ஸை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்து கொள்ளவும். நூடுல்ஸில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து குலுக்கவும்.
கழுவிய பீன்ஸ் மற்றும் கேரட் ஆகியவற்றை மெல்லிய துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கவும்.
இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை நன்றாக அரைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
உப்பு சிறிதளவு சேர்த்து பீன்ஸ் மற்றும் கேரட்டை பாதியளவு வேக வைத்து கொள்ளவேண்டும். நீரில்லாமல் வடிகட்டி வைக்கவும்.
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றவும். அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கி தக்காளி மசிந்ததும், அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் வேக வைத்துள்ள கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். வெங்காய தாள் சேர்க்கவும்.
கடைசியாக வேக வைத்துள்ள நூடுல்ஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்க்கவும். நன்றாக இவையனைத்தையும் கிளறவும். மற்றோரு கடாயில் எண்ணெய் விட்டு, கலந்து வைத்திருக்கும் முட்டையை பரவலாக ஊற்றி அதன்மீது சமைத்து வைத்துள்ள நூடுல்ஸ் சேர்க்கவும். அதனுடன் மிளகுத்தூள் சேர்த்து முட்டை வெந்துவிட்ட நிலையில் கிளறி விட்டு இறக்கி பரிமாறவும். சுவையான முட்டை நூடுல்ஸ் தயார்.